மலையக பாடசாலை மாணவர்களின் இடைவிலகளில் தலைநகரின் தலையீடு!!

0
268

ஒரு சமூகத்தின் வளர்ச்சி கல்வியினால் வளர்த்தெடுக்கப்படும். இளைய சமுதாயத்தினரின் வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது. இங்குகல்வி என்பது ஒவ்வொரு மாணவனும் தங்குதடையற்ற எவ்வித பக்க சார்பான கல்வியை பெற்றுக் கொள்ளும் போதே சமுதாயம் எல்லாத்துறைகளிலும் அபிவிருத்தியை நோக்கி செல்லலாம் இவ்வாறு ஒரு மாணவனின் கல்வி கற்பதில் குடும்பம் பாடசாலை மற்றும் அவனது அக புற காரணிகள் என்பன குறித்த மாணவனுக்கு ஏதுவானதாக அமையவேண்டும்.

இவற்றில் ஏதாவது ஒன்றில் மாறுபாடு நிகழுமாயின் குறித்த மாணவன் உளவியல் ரீதியான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் அதேவேளை தனது கல்வியில் பின்னடைவை சந்திக்க கூடும் அதுவே மேற்குறிப்பிட்ட அடிப்படையில் பார்க்கும்போது ஒரு மாணவன் தனது பாடசாலைக் கல்வியை சீராக கொண்டு செல்ல என்று மலையகத்தைப் பொறுத்தவரை தலைநகரின் பாதிப்பானது பாரிய தடையாக உள்ளது என்று மலையகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் தேயிலை தோட்டத்தில் பணிபுரிவதில் காட்டிலும் தலைநகராகிய அபிவிருத்தி அடைந்து வரும் பணிபுரிகின்றனர் குடும்பத்தின் வறுமை கோரத்தாண்டவம் தனது பிள்ளைகளின் வாழ்க்கை என்பவற்றை முன்னிலைப்படுத்தி பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்ள தலைநகரை நோக்கி படையெடுக்கின்றனர்.

இவ்வாறாக தலைநகரை நோக்கிய படைப்பானது பாடசாலை மாணவர்களையும் விட்டுவைக்கவில்லை குறிப்பாக இன்று கொழும்பில் வேலை செய்யும் குறிப்பாக புறக்கோட்டை சார்ந்த பகுதிகளில் 14 தொடக்கம் 18 வயது நிரம்பிய பாடசாலையை விட்டு விலகிய மாணவர்கள் அதிக சிறு சிறு தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர் இவ்வாறு ஏன் பாடசாலையை விட்டு ஒரு தொழிலை பெற்றுக்கொள்ள தலை நகருக்கு செல்ல வேண்டும் மற்றும் அதன் தேவைப்பாடு என்ன இதற்கான காரணங்களை இனி
பார்ப்போம்.

குடும்பத்தின் வறுமை நிலை மற்றும் அது சார்ந்த பொருளாதார பின்னடைவுகள் நவநாகரீக கலாச்சாரங்களுக்கு மாணவர்கள் அடிமையாதல் போன்ற விடயங்கள் இன்றைய மலையக சிறுவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகிய நோக்கி
செல்வதற்கான உந்துதல் சக்தியாக அமைகின்றது. சுயமாக சிந்திக்கின்ற வயது வந்தவுடன் குடும்பம் மற்றும் சமூகம் என் பார்வையில் பல்வேறு வகையில் பார்க்கப்படும் குறிப்பாக வறுமையின் போது ஒரு குடும்பத்தில் நிலவும் அதனால் தனது
கல்வி நடவடிக்கைகள் மற்றும் விரும்பிய விடயங்களை வாங்குவதற்கு குறித்த மாணவனுக்கு பொருளாதார ரீதியாக பல்வேறு தடைகள் ஏற்படுகின்றது.

மேலும் இவ்வாறான நவநாகரீக கலாச்சாரத்தில் கொண்டவர்களையே இன்றைய மலையக மாணவர்கள் தனக்கான முன்மாதிரியாக கொண்டுள்ளனர் இது ஒரு உளவியல்ரீதியான பார்த்தாலும் கூட இதன் நிமித்தம் சாதாரணதரம் அல்லது அதற்கும் முன்பாக குறிப்பாக ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு களிலேயே பாடசாலையை விட்டு மாணவர்கள் இடைவிலகும் துர்ப்பாக்கிய நிலை இன்று மலையகத்திற்கு உருவாகியுள்ளது இவ்வாறு இடைவிலகும் மாணவர்களே குறிப்பிட்ட காலம் செல்லுதல் நான் இன்னும் கல்வியை தொடர்ந்து இருக்கலாம் வாழ்க்கையை நானே வீணாக்கி கொண்டேன் என்று தனது வாழ்க்கையை பற்றிய கனவு சிதைந்த
படியான எண்ணங்களை கொண்ட இளைஞர்கள் யுவதிகள் இன்று மலையகத்தில் பெரும்பாலானோர் காணப்படுகின்றன.

சிறுவயதில் தனக்கான இலக்கு சிறந்ததாக காணப்பட்டாலும் குறிப்பிட்ட புரிந்துணர்வு மிக்க வயது வந்த உடன் அதற்கான சிறந்த வழிகாட்டல்கள் இல்லாததன் காரணமாக இவ்வாறு மாணவர்களின் நகர்வுகள் தவறாக அமைகின்றது இன்று மலையகத்தைப் பொறுத்தவரை பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை சடுதியாக வளர்ச்சியை கொண்டிருந்தாலும் இவ்வாறான இடைவிலகல் அதன் வளர்ச்சி எதிர்காலத்தில் வீட்டுக்கு செல்லலாம் என்பது நிதர்சனமான உண்மையாகும்

இதன்போது தனது சுதந்திரம் பொருளாதாரத்தை கூட்டி கொள்வதில் தான் தங்கியுள்ளது என்ற தவறான விடயத்திற்கு மாணவர்களின் எண்ணங்கள் நகர்கின்றது இது இவர்களின் தேவையாக உள்ளது இவ்வாறான சந்தர்ப்பங்களில் மலையக பாடசாலைகளில்
இடைவிலகும் மாணவர்களின் முதலாவது தெரிவு தலைநகரை சார்ந்ததான தொழில்களாக காணப்படுகின்றது குறிப்பாக இவ்வாறு இடைவிலகும் மாணவர்கள் ஆடை விற்பனை நிலையங்கள் ஆடை தொழிற்சாலைகள் நகை கடைகள் மற்றும் கூலி வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.

மேற்குறிப்பிட்ட தொழில்களையும் செய்வதாக கூறவில்லை மாறாத அதே தலைநகரில் தனக்கான தகைமைகளை உயர்த்திக்கொண்டு தேன் சிறந்த தொழில்களை செய்வதற்கு முன் வராமல் இருக்கின்றனர் என்பதே எல்லோருடைய கேள்விக்குறியாக உள்ளது இதற்கு காரணம் காலகட்டத்திற்கு ஏற்ப தனக்கான வாழ்க்கையை கொழும்பிற்கு தொழில்களை தேடி செல்வதில்தான் அமைந்துள்ளது என்ற மாயையில் இன்றைய மலையக சிறார்களின் எண்ணங்கள் மாறியுள்ளனர்.

இவ்வாறு இடைவிலகல் மற்றும் ஒரு காரணியாக அமைவது நவநாகரீக கலாச்சாரத்திற்குள் மாணவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள நினைக்கும் போது அதற்கான தகுந்த காரணம் தலைநகர் சார் பிரதேசங்களில் அதிகம் காணப்படுவது குறிப்பாக தனக்கான கையடக்கத்தொலைபேசி முதல் தலைநகர் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யும் வரை பொருளாதார தேவைப்படுவதால் தொழிலை நாடிச் செல்வதற்காக தள்ளப்படுகின்றனர் ஒட்டுமொத்தமாக கூறும்போது சிறுவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகிய செல்வதால் ஒரு சமுதாயத்தின் எதிர்கால வளர்ச்சி முடக்கப்படுகின்றது என்பதை எல்லோராலும் மறுக்கப்பட முடியாத
உண்மையாகும்.
செல்லமுத்து ஹேமாமாலினி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here