மலையக புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பின.

0
68

மலையகத்திற்கான புகையிரத சேவைகள் இன்று அதிகாலை நான்கு மணி முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத திணைக்கள கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தவர்.
நானுஓயாவிலிருந்து நேற்று 15 ம் திகதி கொழும்பு நோக்கி புறப்பட்டு வந்த விசேட புகையிரதம் கிறேஸ்வெஸ்டனுக்கும் நானுஓயாவிக்கு இடையில் கடந்த சில நாட்களுக்கு முன் தடம் புரண்ட இடத்திற்கு சமீபமாக புகையிரதம் தடம் புருண்டதன் காரணமாக நேற்று 3 மணி முதல் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் தடைப்பட்டன.

இதனால் கொழும்பிலிருந்து பதுளை நோக்கு வருகை தந்த பயணிகள் தலவாக்கலை புகையிரத நிலையத்திலிருந்து பேரூந்துகள் ஊடாக அனுப்புவதற்கும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பயணிகள் நானுஓயாவிலிருந்து அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படிருந்தன.
இதனால் தைப்பொங்கல் திணத்திற்காகவும் விடுமுறை கழிப்பதற்காகவும் மலையக பகுதிகளுக்கு வருகை தந்திருந்து புகையிரத பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

அதனை தொடர்ந்து புகையிரத திணைக்கள ஊழியர்கள் இரவு பகலாக புகையிரதத்தினை; தண்டவாளத்தில் அமர்த்துவதற்கும் பாதையினை சீர் செய்வதற்கும் மேற்கொண்டதனை தொடர்ந்து இன்று 16 ம் திகதி அதிகாலை நான்கு மணி முதல் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.

நேற்று புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக மலையகத்திற்கான மூன்று புகையிரத சேவைகள் இரத்தச் செய்யப்பட்டதாக புகையிரத திணைக்களத்தின் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

எது எவ்வாறான போதிலும் கடந்த சில வாரங்களாக பல தடைவைகள் புகையிரதங்கள் தடம் புரள்வு காரணமாக தடைப்பட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here