மலையக மக்களுக்கு இரும்பு அரணாய் இருந்து மலையக மக்களை பாதுகாத்த சாணக்கிய தலைவன் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் என்பதில் மலையக மக்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபத்தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான பழனி சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகரும் இந்திய வம்சாவளி மக்களின் தலைவருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சிரார்த்த தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது பழைய பாராளுமன்ற வளாகத்தில் உள்ள உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மலர் கொத்து வைத்து மரியாதை செலுத்தியமை இந்திய வம்சாவளி அனைத்து மக்களும் பெருமை கொள்ள வேண்டும்.அதேபோல பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் சிலை வைத்தமைக்காக அனைத்து தலைவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபத்தலைவரும் முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினருமான பழனி சக்திவேல் தெரிவித்திருந்தார்.
நீலமேகம் பிரசாந்த்