பாரதப் பிரதமர் நரேந்திர மோதியை ஒட்டு மொத்த மக்களையும் ஒட்டுமொத்த இந்திய வம்சாவளி மக்களும் வரவேற்கவேண்டும் என கூறுகிறார் மத்திய மாகாண சபை உறுப்பினர் இராதாகிருஷ்ணன் ராஜாராம்.
நேற்றைய தினம் நானுஓயா மஹாத்மா காந்தி மண்டபத்தில் இடம்பெற்ற விஷேட கூட்டத்தின்போது இலங்கைக்கு வரும் நரேந்திர மோதி மலையக மக்களுக்கு கிடைக்கும் ஒரு வரப்பிரதாசம். இதை ஒற்றுமையாக பயன்படுத்தவேண்டும்.
இந்திய வீட்டுத்திட்டங்களானாலும் சரி, வேறெந்த உதவிகளாகவிருந்தாலும் இவர் இலங்கைக்கு வந்து சென்ற பின் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் இதை சிலர் அரசியல் செய்கிறார்கள். இதை அரசியல் ரீதியாக பார்க்கக்கூடாது. அரசியல் கட்சிகளாக பிரிந்திராமல் நாம் அனைவரும் இந்திய வம்சாவளி மக்களாக ஒன்றிணைந்து எம்மால் முடிந்த வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்வதே சிறந்த செயலாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
டீ. சந்ரு
நானுஓயா