மலர்ந்துள்ள ஆங்கில புத்தாண்டினை மலையக வாழ் மக்கள் சமயத்திற்கு முக்கியத்துவமளித்து புதிய புத்தாண்டினை இன்று (01) வரவேற்றனர்.
மலர்ந்துள்ள ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு மலையகத்திலுள்ள இந்து பௌத்த,கிறிஸ்த்தவ பள்ளிவாசல்களிலும் பல்வேறு நிகழ்வுகள் இன்று (01) அதிகாலை இடம்பெற்றன.
இந்து சமய வழிபாடுகள் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரசித்த பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்; ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. விநாயகர் பெருமானுக்கு பால் ,தேன்,நெய்,இளநீர் உள்ளிட்ட பொருட்களினால் அபிசேகம் இடம்பெற்று ,மேள தாள வாத்திய இசை முழங்க விசேட புத்தாண்டு பூஜை, வசந்த மண்டபூஜை திரவிய அலங்கார பூஜை,ஆகியன இடம்பெற்றன.
இந்த பூஜை வழிபாடுகளில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு நல்லாசி வேண்டி விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன் மக்கள் எதிர் நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிகள் தீர வேண்டும் என வேண்டுதல்களும் இதன் போது இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். சுகாதார வழிகாட்டல்களுக்கமைய நடைபெற்ற குறித்த பூஜை வழிபாடுகளில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையினர் கலந்து கொண்டிருந்தனர். பூஜை வழிபாடுகள் ஆலய பிரதமகுரு பிரம ஸ்ரீ சந்திராநந்த சர்மா தலைமையில் நடைபெற்றன.
கே.சுந்தரலிங்கம், க.கிஷாந்தன்