மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கொரோனாவினால் வறுமானத்தை இழந்த குடும்பங்களுக்கான நிவாரண பொருட்கள் மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தலைமையில் கையளிக்கப்பட்டது.
மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் ஏற்பாட்டில் அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட மோர்ஷன் தோட்டத்தில் 90 குடும்பங்களுக்கும்,ஆக்ரோ தோட்டத்தில் இருபது குடும்பங்களுக்கும் உலர் உணவு பொருட்கள் கையளிக்கப்பட்டன.
இதன்போது மலையக மக்கள் முன்னணியின் பிரதி பொது செயலாளர் கே.சிவஞானம், உபதலைவர் கே.பரமசிவம், மத்தியகுழு உறுப்பினர் சாந்தகுமார், மாவட்ட செயலாளர் ஜெயசீலன் ஆகியோரின் பங்கு பற்றலோடு குறித்த நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டது.
நீலமேகம் பிரசாந்த்