மலையக மக்கள் முன்னணி தலைவரை பணி நீக்கம் செய்து கைது பண்ணுமாறு ஸ்டாபூட் தோட்டத்தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை 03/07/2021 சனிக்கிழமை முன்னெடுத்தனர்.
அதாவது ராகலை மேற்பிரிவை சேர்ந்த ம.ம.மு தோட்டத்தலைவர் ஸ்டாபூட் தோட்டத்தை சேர்ந்த கிருஸ்ணா என்பவரை தாக்கியமையினாலேயே தோட்டத்தொழிலாளர்கள் இவ்வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.இது தொடர்பில் மலையக மக்கள் முன்னணி தலைவர் வே.ராதாகிருஸ்ணன் குறிப்பிடுகையில் மலையக தொழிலாளர் முன்னணியின் பிராந்திய இயக்குனர் க.செல்வநாதன் தலைமையிலான குழு இப்பிரச்சனை தொடர்பில் தீர விசாரித்து தோட்ட தலைவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நீலமேகம் பிரசாந்த்