நாட்டின் தற்போதைய நிலை விலை வாசி உயர்வு, வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்காமை, அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் எதிர்நோக்கு பிரச்சினைகள், தோட்ட தொழிலாளர்களின் இன்றைய நிலை, கம்பனிகளின் கெடுபிடி சம்மந்தமாக மலையக மக்களுக்கு தெளிவு படுத்தும் வகையில் மலையக மக்கள் முன்னணியின் செய்யட்பாட்டாளர்களை தெளிவு படுத்தி அவர்களின் ஊடக இன்னலுரும் மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவுவதை நோக்கமாக கொண்டு நுவரெலியா மாவட்டத்தின் எல்லா நகரங்களிலும் நடத்தப்படும் கூட்டத்தின் ஆறாவது கூட்டம் மஸ்கெலியாவில் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் கட்சி முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மலையக மக்கள் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் உட்பட மஸ்கெலியா பகுதியிலுள்ள ம.ம.முன்னணியின் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நீலமேகம் பிரசாந்த்