மலையக மக்கள் 200வது வருடத்தில் உரிமைக்காக அணிதிரள வேண்டும். காலி மாவட்ட அருட் தந்தை மைக்கல் ராஜேந்திரன் அழைப்பு.

0
83

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து இந்த வருடத்துடன் 200 வருடங்கள் ஆகிகின்றன ஆனால் இன்றும் அவர்கள் முகவரி அற்ற ஒரு சமூகமாகவே வாழ்ந்து வருகின்றனர்.அவர்களுக்கு காணி உரிமை கிடையாது கல்வி சுகாதாரம் போக்குவரத்து அபவிருத்த உள்ளிட்ட உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் நாம் பின்தங்கியே உள்ளோம் எனவே 200 வருடம் கடந்து நாம் உரிமையற்ற பிரஜைகளாகவே வாழ்ந்து வருகிறோம்.என காலி மாவட்ட அருட் தந்தை மைக்கல் ராஜேந்திரன் மலையக மக்களிடம் அழைப்பு விடுத்தார்.
மலையகம் 200 மற்றும் சர்வதேச தேயிலை தினம் ஆகிய இரண்டினையும் கொண்டாடும் நிகழ்வு ஒன்று ஹேவாஹெட்ட பகுதியில் உள்ள கிறிஸ்த்தவ ஆலய மண்டபத்தில் கரிட்டாஸ் செட்டிக்ஸ் இயக்குநரும் பங்கு தந்தையுமான டெஸ்மென் பெரேரா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று நாங்கள் 200 வருடங்கள் கழிந்த நிலையிலும் விலாசமற்ற ஒரு சமூகமாக வாழ்ந்து வருகிறோம் எங்களுக்கென்று ஒரு காணித்துண்டுகூட கிடையாது நாங்கள் மற்றவர்களின் காணி செம்மைப்படுத்தி அதனை அழகு பார்த்து வருகிறோம் அவ்வாறு அழகு பார்த்துவரும் நாம் எங்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுத்தால் நாங்கள் வேலி அமைக்க மாட்டோமா வீடு கட்ட மாட்டோமா? எவரும் வீடுகளை கட்டித்தரும் வரை பார்த்திருப்போமா? இன்று கல்வியினை எடுத்துக் கொண்டால் மத்திய மாகாணத்தில் ஒரு சில பிரதேசங்களை தவிர ஏனைய பிரதேசங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையே உள்ளன.

இரத்தினபுரி,காலி,உள்ளிட்ட பல மாவட்டங்களை எடுத்துக்கொண்டால் அங்குள்ள மாணவர்களுக்கு 200 வருடம் கழிந்த நிலையில் இன்னமும் கூட கணித விஞ்ஞனம் படிக்க கூடிய வாய்ப்பு இல்லை,சுகாதாரத்தினை எடுத்துக்கொண்டாலும் இதே நிலை தான் ஏனையவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் எதுவும் பெருந்தோட்ட மக்களுக்கு கிடைப்பதில்லை இது வரை காலமும் மலையக மக்களின் வயிற்று பசியினை போக்கும் வகையில் தான் செயத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன இனி வரும் காலங்களிலாவுது உரிமைக்காக குரல் கொடுக்கும் மக்களாக அணி திரள வேண்டும் நாம் இந்த நாட்டிக்கு வந்து 200 வருடங்களாக இந்த நாட்டில் தான் வாழ்ந்திருக்கிறோம்,இந்த நாட்டின் பொருதாரத்திற்கு தான் உழைத்திருக்கிறோம் எனவே இந்த அரசாங்கம் இந்த மக்களுக்கு தேவையான உரிமைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கான சட்ட நடவடிக்கைகளை மக்கள் பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டும் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்’

குறித்த நிகழ்வு ஹேவாஹெட்ட நகரில் இருந்து மலையக மக்களின் உரிமைகளை வலியுறுத்தி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றதுடன் மலையகத்தின் பொருளாதாரத்திற்காவும் மலையக மக்களின் வளர்ச்சிக்காகவும் உழைத்து உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து மலையக மக்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்து அவர்கள் பட்ட கஸட்டங்கள் மற்றும் தியாகங்கள் அவர்களின் உரிமைகள் தற்போது உள்ள நிலை போன்றவை தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு 200 வருடத்திலாவுது மக்கள் உரிமைக்காக அணிதிரள வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டது.
இதில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
நிகழ்வுக்கு நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் அரச அலுவலர்கள்,இளைஞர்கள் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here