மலையக மாணவர்கள் இன்று பல்வேறு துறைகளில் சலைத்தவர்கள் அல்ல என்பதனை நிரூபித்துவருகிறார்.இன்று நடைபெற்ற யோகாசன பயிற்சியிலும் அவர்களின் திறமைகள் பறைசாற்றுகின்றன ஆகவே இவர்களின் கலை ஆர்வத்தினை ஊக்குவிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என மலையக இந்து குருமார்கள் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் சுரேஸ்வர சர்மா தெரிவித்தார்.
சென்கூம்ஸ் தோட்ட அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து லந்துலை சென்கூம்ஸ் கருமாரியம்மன் யோகா பயிற்சி நிலையம் நேற்று (01) திகதி ஏற்பாடு செய்த யோகா கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று (01) ஆலய கலாசார மண்டபத்தில் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவி;க்கையில் பெரும் பாலானவர்கள் மற்றவர்களின் குறைகளையும் அவர்களின் செயல்களையுமே ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள் இதனால் சமூகம் பின்னோக்கி செல்வதோடு பல்வேறு பிரச்சினைகளும் தோற்றுவிக்கின்றன.
இவ்வாறான கலைகள் மூலம் மன அமைதி பெறுகிறது மன அமைதி எங்கு இருக்கின்றதோ அங்கு சாந்தியும் சமாதானமும் சகவாழ்வும் நிலவும் மனம் அமைதி பெறும் போது அது மற்றவர்களின் நிலையினை கடந்து தூய எண்ணங்களையும் சரியான நேர்மையான வழியையும் காட்டும் அதனால் தான் தொன்று தொட்டு இவ்வாறான பயிற்சிகள் எமது ஆன்மீகத்திலே கொண்டுவரப்பட்டுள்ளன.
இவ்வாறான யோகா பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் சமூத்தில் தேவையற்ற சிந்தனைகள் தேவையாற்ற பிரச்சினைகள் இல்லாது போய் நல்ல ஒரு நிலைக்கு இட்டுச்செல்லும்.அது மாத்திரமன்றி உடல் உள ரீதியான குறைபாடுகள் நீங்கி ஆரோக்கியமான வாழ்க்கையினையும் ஆன்மீக சிந்தனைகளையும் அது ஏற்படுத்தும் ஆகவே இவ்வாறான பயிற்சிகளை ஊக்குவித்து அவர்களை கௌவித்து மேலும் ஊக்கப்படுத்த வேண்டும் ஆகவே இன்றைய தினம் திறமையினை காட்டிய மாணவர்களையும் அதனை பயற்றுவித்து ஆசிரியர்களையும் எதிர்காலத்தில் மிகப்பெரிய மேடையில் கௌரவிப்பதற்கான ஏற்பாடுகளை இந்து குருமார்கள் ஒன்றியம் மேற்கொள்ளும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் போது மாணவர்களின் நாடன நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சிறப்பு ஆசன கண்காட்சியும் நோய்க்கு மருந்தாககும் விசேட யோகா பயிற்சிகளும் இதன் போது மாணவர்களால் செய்து காட்டப்பட்டன..
இந்நிகழ்வுக்கு சென்கூம்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் என் தங்கராஜ், இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர் தற்புருச சிவாச்சாரியார் எஸ் செல்லதுரை குருமார்கள்,பெற்றோர்கள்,சென்கூம்ஸ் முத்தமாரியம்மன் ஆலய பிரதம குரு உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்