மலையத்தில் சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை தடுக்க 22 அமைப்புக்கள் ஹட்டனில் ஒன்று கூடல்.

0
174

சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாது செய்வதற்காக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஸ்ணன் தலைமையில் 22 அரசசார்பற்ற நிறுவனங்கள் ஹட்டனில் ஒன்று கூடி கலந்துரையாடலில் ஈடுப்பட்டன.

குறித்த கலந்துரையாடல் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் ஹட்டன் கிருஸ்ணபவன் மண்டபத்தில் இன்று (25) காலை நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலுக்கு கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கலந்து கொண்டார். குறித்த கலந்துரையாலில் சிறுவர்கள் துன்பிரயோகங்களையும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதற்கான காரணத்தினையும் இதனை தவிர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய வழி முறைகள் மற்றும் அவ்வாறு நிகழும் போது எடுக்கப்பட வேண்டிய சட்டதிட்டங்கள் தொடர்பாக ஆழமாக ஆராயப்பட்டன.

இதன் போது கலந்து கொண்டவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.இதில் சிறுவர்கள் துஸ்பிரயோகம் இடம்பெறுவதற்கு மலையகப்பகுதியில் தற்போது அதிகரித்துள்ள நுண்கடன் திட்டங்களே காரணமாக அமைந்துள்ளன பெருவாரியான நுண்கடன் நிறுவனங்கள் தங்களின் கடனை அறிவிடுவதற்காக வீட்டுக்கே சென்று பல்வேறு அலுத்தங்கள் பிரயோகிக்கின்றன.

இதனால் சிறுவர்கள் மன உலைச்சலுக்கு உள்ளாகி வேலை செய்ய நிலைக்கு தள்ளப்படுகின்றன. அத்தோடு பாடசாலைகளிலிருந்து இடை விலகும் சிறுவர்களுக்கு அவர்களுக்கு கைதொழில்களோ அல்லது மாற்று நடவடிக்கைகளோ இல்லாததன் காரணமாக இவர்கள் வழி தவறி செல்கின்றனர்.

சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் பெற்றார்களுக்கும் இடைத்தரகர்களுக்கு உரிய சட்டங்கள் நடைமுறையில் உள்ள போதிலும் அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்காததன் காரணமாக இந்த நிலைமை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன.

அதே நேரம் எமது நாட்டில் நாள் ஒன்றுக்கு 92 லட்சம் ரூபா மக்களின் வரிப்பணத்தினை செலவு செய்து பாராளுமன்றம் கூடி முறையான சட்டங்களையும் உரிய நடவடிக்கைகளையும் எடுக்காததன் காரணமாக மக்கள் இன்று பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே மற்றுமொரு ஹிசாலினி சாவுவதற்கு முன் அனைவரும் ஒன்று கூடி மலையகத்தில் சிறுவர் துண்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தவிர்க்க முன்வர வேண்டும் எனவும் இதற்கு காத்திரமான வேலைத்திட்டங்களை அரசியல் மற்றும் அரசார்பற்ற நிறுவனங்கள் போராட்டங்களை மாத்திரம் செய்யாது உரிய நடவடிக்கைகளையும். மேற்கொள்ளப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டன.

கே.சுந்தரலிங்கம் 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here