நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட கொட்டகலை கிறிலஸ்பாம் பாடசாலையில் மழை காரணமாக அடிக்கடி கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நான்கு தோட்டங்களை ஏந்து பிரதேசமாக கொண்ட குறித்த பாடசாலையில் சுமார் 350 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும் அடிக்கடி மழை வரும் போது குறித்த பாடசாலையில் வெள்ள நீர் உட்புகுந்து கற்றல் உபகரணங்கள் உட்பட புத்தகங்கள் சேதமடைவதாகவும் இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அடிக்கடி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்;.
கடந்த 10 திகதி இப்பிரதேசத்திற்கு பெய்த மழை காணரமாக குறித்த பாடசாலை கட்டத்தினுள் வெள்ளம் புகுந்த மாணவர்கள் கற்ற உபகரணங்கள் உட்பட பல தளபாடங்கள்,சேதமடைந்துள்ளதாகவும் இதனால் மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பாடசாலையின் அருகாமையில் உள்ள ஓடை மழை நேரங்களில் நிரம்பி வழிந்தோடுகின்றமையினாலேயே குறித்த பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைவதாகவும் இந்த ஓடையினை அகலப்படுத்தி அணை தடுப்பு சுவர் ஒன்றினை கட்டுவதன் இந்த பிரச்சினை தீர்வு காணக்கூடிய நிலையிருந்து இது குறித்து பொறுப்பு வாய்ந்தவர்கள் அக்கறை கொள்ளாதிருப்பது மிகவும் கவலையளிப்பதாகவும் இவர்கள் தெரிவி;க்கின்றனர்.
வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் பெற்றோர்கள் வந்து சுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பலரது தொழில் பாதிக்கப்படுவதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் .
எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மலைவாஞ்ஞன்