மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தோட்டம், லாட்ஜ்வில் பிரிவில் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் காட்மோர் ஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.இந்த சடலம் 21.07.2018 அன்று மதியம் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆற்றுப் பகுதியில் சடலமொன்று கிடப்பதாக அப்பகுதி வழியாக சென்றவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.
69 வயது மதிக்கத்தக்க காட்மோர் தோட்டம், லாட்ஜ்வில் பிரிவைச் சேர்ந்த சங்குப்பிள்ளை பெரியக்கா (இரண்டு பிள்ளைகளின் தாய்) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
21.07.2018 அன்று காலை வெளியே சென்ற இவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சடலம் மரண விசாரணைகளின் பின் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)