நேற்று காலை 8 மணி முதல் மஸ்கெலியா சுகாதார.அதிகாரி துரைசாமி பிள்ளை சந்தரராஜன் பணிப்புரை க்கு இணங்க மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஏழு முன்பள்ளி சிறார்கள் 170 பேருக்கு பற்கள் பரிசோதனை செய்து அவர்களுக்கு பற்பசை மற்றும் தூரிகை வழங்கப் பட்டது.
இந்த நிகழ்வில் மஸ்கெலியா சுகாதார அதிகாரி பிரிவில் உள்ள பல் மருத்துவர் ஹிரூஸி ஜானிக்கா கலந்து கொண்டு சிகிச்சை அளித்து சிறார்கள் எதிர் காலத்தில் தங்களது பற்களை சுத்தம் செய்தல் பற்களை பாதுகாத்தல் பற்றி விளக்கமளித்தார்.
ஏழு முன்பள்ளி பாடசாலை மாணவர்கள் 170 பேர் மஸ்கெலியா மக்கள் வங்கி முன்பாக இருந்து பிரதான வீதி நான்காம் வீதி மற்றும் இரண்டாம் வீதியூடாக மஸ்கெலியா சென் ஜோசப் தமிழ் வித்தியாலய கீழ் பிரிவு பாடசாலைக்கு பதாகைகள் ஏந்திய வண்ணம் அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு பற் பரிசோதனை மேற்கொள்ள பட்டது.
சிறார்கள் ஊர் வலமாக செல்லும் வேளையில் எதிர் காலத்தில் புகைத்தல்,வெற்றிலை, பொலித்தீன்,பிலாஸ்டிக் பொருட்கள் ஒழிப்போம் என்ற பதாகைகள் ஏந்திய நிலையில் சென்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய சிறார்களுக்கு சத்தான உணவுகளை அதிகம் வழங்க வேண்டும் என வைத்திய அதிகாரி கேட்டுக் கொண்டார்.
டி சந்ரு