கடந்த நாட்களின் பெய்த கடும் மழை காரணமாக மலையகத்தின் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுள்ளன.
இந்நிலையில் மஸ்கெலிய பிரதேச சபைக்குட்பட்ட மவுசாக்கலை தோட்டத்தில் காணப்படும் தொழிலாளர் தொடர் குடியிருப்பு ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர் குடியிருப்பில் காணப்படும் ஒரு வீட்டின் சுவர் மற்றும் நிலம் வெடித்துள்ளதுடன் குறித்த வீட்டின் சமையலறை மற்றும் ஏனைய இரண்டு வீட்டின் சமையல் அறைகளிலும் வெடிப்பு ஏற்பட்டு நிலம் தாழ் இறங்கியுள்ளது.
இந்த நிலம் தாழ் இறங்கியுள்ள இடத்திற்கு கீழ் பகுதியில் 12 அறைகளைக் கொண்ட தொடர் குடியிருப்பு ஒன்று காணப்படுவதுடன் வெடிப்பு ஏற்பட்ட நிலம் தாழ் இறங்கினால் கீழ் பகுதியில் காணப்படும் தொடர் குடியிருப்பும் முழுமையாக பாதிக்கப்படும்.
இவ்விடயம் தொடர்பாக குறித்த பகுதிக்கான கிராம உத்தியோகத்தரிடம் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு வினவியபோது இவ்விடயம் தொடர்பில் நிறுவனத்திற்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாரிய பாதிப்பு ஏற்பட முன் உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.