மஸ்கெலியாவில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

0
153

பிரௌன்ஸ்விக் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 30 வயதுடைய சந்தேன நபர்களே இதன்போது கைது செய்யப்பட்டனர்.
மஸ்கெலியா பிரௌன்விக் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், பிரௌன்ஸ்விக் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 30 வயதுடைய சந்தேக நபர்களே இதன்போது கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து மாணிக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களை பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பிணையில் விடுதலை ஆனது மாத்திரமன்றி எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரைணை முன்னெத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here