மஸ்கெலியா பிரதி தவிசாளர் தாக்குதலுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்

0
232

மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஸ்கெலியா பிரதேச அமைப்பாளருமான பெரியசாமி பிரதீபன் கடந்த 13ஆம் திகதி மஸ்கெலியா பிரதேச சபை அமர்வின்போது சபையின் உறுப்பினர் ஒருவரால் தாக்குதலுக்கு உட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியாக நியாயமான விசாரணை மேற்கொண்டு குறித்த உறுப்பினர்கள் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் பழனியாணடி ஆனந்தன் தெரிவித்தார்.
இன்று 14 ஆம் திகதி மஸ்கெலியா பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கடந்த 13ஆம் திகதி மஸ்கெலியா பிரதேச சபையின் அமர்வு பிரதேச சபையின் தலைவி செண்பகவல்லி தலைமையில் நடைபெற்றுத. இதன்போது பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் அனுமதியற்ற கட்டிடங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சபையில் கோரியபோது அதற்கு ஆதரவளிக்ககும் வகையில் உப தவிசாளர் பெரியசாமி பிரதீபன் உரையாற்றுகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கும் உப தவிசாளர் இருக்கும் இடையில் கருத்து வாதங்கள் இடம்பெற்றது. அப்போது மொட்டு கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் உப தவிசாளர் மீது தாக்குதல் நடத்தினார்.
இதனால் அவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார். மக்கள் பிரதிநிதிகள் கருத்துக்கள் வெளியிடும்போது அல்லது வாக்குவாதம் செய்யும்போது இவ்வாறு தாக்குதல் நடத்துவது முறையற்ற விடையம் ஆகும் எனவே இதுகுறித்து உள்ளூராட்சி சபை ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சு உரிய விசாரணைகளை மேற்கொண்டு இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்

இந்த ஊடக சந்திப்பில் கே.சுரேஸ்குமார் ஏ. ரவிந்திரராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here