மஸ்கெலியா – புரவுன்சீக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் இன்று காலை குளவி கொட்டுக்கு இலக்கான மூன்று ஆண் தோட்ட தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தோட்ட தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் காலை 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேயிலை செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கூடு கலைந்து கொட்டியதில் இவ்வாறு மூன்று ஆண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மூவரும் சிகிச்சை பெற்று வருவதாக குறித்த வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.