மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் தலவாக்கலை தோட்டத்தை சேர்ந்த முகாமையாளர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், மற்றும் நிர்வாக பிரிவின் உத்தியோகத்தர்கள் அனைவரும் இன்று தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக கவணயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
நேற்றைய தினம் தலவாக்கலை தோட்டத்திற்குட்பட்ட கட்டுக்கலை தோட்டத்தில் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் நடந்த சம்பளப் பிரச்சினை தொடர்பான வாய்தர்க்கத்தில் தோட்ட உதவி முகாமையாளர் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இப்போராட்டம் நடைபெறுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உதவி முகாமையாளர் மற்றும் இரண்டு வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு பெண் தொழிலாளர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி:-
ரொமேஸ் தர்மசீலன்.