மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு சுமார் 10305 கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

0
186

மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் கடந்த 14 ம் திகதி வரை  சுமார் 10305 கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி துறைசாமிபிள்ளை சந்திரராஜன் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் பணிகள் இன்றும் பல பொது சுகாதார பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டன. இன்று (16) மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திலும் மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதர் ஆலய மண்டபத்திலும் ஆசிரியர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்கள் ஆகியோருக்கு சைனோபார்ம் முதல் டோஸ் தடுப்பு மருந்தும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் பெற்றுக்கொடுக்கப்பட்ட போது ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….

மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவில் சைனோபார்ம் முதல் தடுப்பூசி, 8067 பேருக்கும், இரண்டாம் டோஸ் தடுப்பூசி, இது வரை 2238 பேருக்கும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

இதே நேரம் குறித்த சுகாதார பிரிவில் இது வரை 23  கொவிட் 19 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், 1201 பிசிஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளதாகவும் அதில் 417 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது வரை சுமார் 1449 பேர் கடந்த ஏப்ரேல் முதல் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கடந்த வார பீசிஆர் அறிக்கையின் படி 158 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மஸ்கெலியா  அதிகார பிரிவில் இன்னமும் கொரோனா தொற்று பரவும் அபாயம் நீங்கவில்லை என்பதனால் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here