அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா லக்கம் தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிய இரண்டு மாடி கட்டிட திறப்பு விழா 26.09.2018 அன்று பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் 94 இலட்சம் ரூபா செலவில் இந்த பாடசாலைக்கு புதிய வகுப்பறைக்கான கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண பதில் முதலமைச்சரும், தமிழ் கல்வி அமைச்சருமான எம்.ரமேஷ்வரன், மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. செண்பகவள்ளி, அட்டன் வலய மேலதிக கல்வி பணிப்பாளர், அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
(க.கிஷாந்தன்)