மஸ்கெலியா வைத்தியசாலையில் வைத்தியர் இல்லை பிரதேசவாசிகள் ஆர்பாட்டம்!!

0
213

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டமொன்று இடம்பெற்றதுமஸ்கெலியா வைத்தியசலை வளாகத்தில் 19.07.2018 காலை 9.30 மணியளவிலே இவ் ஆர்பாட்டம் இடம்பெற்றது

ஐந்து மாடி கட்டத்தை கொண்ட மஸ்கெலியா வைத்தியசாலையில் தற்போது மூன்று வைத்தியர்களே கடமையாற்றுவதாகவும் அதில் இருவர் விடுமுறை சென்றுள்ள நிலையில் வைத்தியசாலையின் வைத்தியநடவடிக்கைகள் ஸதம்பிதம் அடைந்துள்ளதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்

மத்திய மாகாண சுகாராத அமைச்சின் கீழுள்ள மேற்படி வைத்தியசாலையில் நோயாளர்கள் தங்கி சிகிச்சைபெற அனுமதிக்கப்படுவதில்லை என்று சிறுவர் பிரிவும் மூடப்பட்டுள்ளதுடன் சிகிச்சை பெற வரும் நோயாளர்கள் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

MASKELIYA (10) MASKELIYA (6) MASKELIYA (5) MASKELIYA (4)

மேலும் 20000 மேற்ட்டோர் வாழும் மஸ்கெலிய பகுதி மக்களின் பிரதான வைத்தியசாலையான மஸ்கெலியா வைத்தியசாலையில் தற்போது தலைமை வைத்தியர் மாத்திரமே கடமையாற்றுவதாகவும் 19.07.2018 காலை பரிசோதணைக்காக வைத்தியசாலைக்கு கர்ப்பிணி தாய்மார்கள் வருகை தந்த போது அங்கு வைத்தியர்கள் இல்லாத நிலையில் இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வைத்தியசாலையில் நிலவும் வளப்பற்றாக்குறையையும் வைத்தியர் மற்றும் தாதியர் குறைபாட்டை தீர்க்க வேண்டும் எனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

 

மு.இராமச்சந்திரன் , எஸ்.சதீஸ், க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here