மஹா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு ஹட்டன் ஜோதிலிங்க ரத பவனி

0
169

மஹா சிவராத்திரியினை முன்னிட்டு மலையகத்தில் உள்ள சிவ ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளும் பல்வேறு நிகழ்வுகளும் இன்று இடம்பெற்றன.
மஹா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு ஹட்டன் ஜோதிலிங்க ரத பவனி நேற்று (18) ஹட்டனில் இடம்பெற்றது.
குறித்த ரத பவனி கடந்த 13 ம் திகதி தலவாக்கலை சென் கூம்ஸ் தோட்டத்தில் மேல் பிரிவு ஆலயத்தில் கடந்த 13 திகதி ஆரம்பித்த குறித்த ரத பவனி தலவாக்கலை கொட்டகலை ஹட்டன் வட்டவளை, நோர்வூட், பொகவந்தலாவை, மஸ்கெலியா உள்ளிட்ட ஏழு நகரங்களையும் நகரங்களை சுற்றியுள்ள தோட்டப்பகுதியில் 128 ஆலயங்களுக்கும் சென்று 22ம் திகதி மஸ்கெலியா நல்லத்தண்ணீர் சிவனொளிபாதமலை அடிவாரத்தில் லக்ஸபான பிரதேசத்தில் கண்காட்சி கூடத்துடன் பிரதிஸ்டை செய்து வைக்கப்படவுள்ளது
குறித்த ரத பவனியினை ஹட்டன் பிரம்மகுமாரிகள் நிலையம் ஏற்பாடுசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பூஜை வழிபாடுகளை கொட்டகலை கொமர்சல் துர்க்கை அம்மன் ஆலயத்தின் பிரதம குரு வேலு சுரேஸ்வர சர்மா நடத்தி வைத்தார்.

 

மலைவாஞ்ஞன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here