மாகாணங்களுக்கு இடையேயான பயணக்கட்டுப்பாடுகள் அடுத்த 14 நாட்களுக்கு தொடர்ந்தும் அமுலில்…

0
182

கோவிட் தொற்று அச்சம் காரணமாக நாட்டில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் புதிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.அதன்படி, இன்று முதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், மாகாணங்களுக்கு இடையேயான பயணக்கட்டுப்பாடுகள் அடுத்த 14 நாட்களுக்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று அதிகாலை 6 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையில் கேகாலை மாவட்டத்தின் மலவிட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கோலிந்த தோட்டத்தின் 03 ஆம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதை தெரிவித்துள்ளார். மேலும், 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here