மாகாணசபைத் தேர்தலை காலவரையின்றிப் பிற்போடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என வெளியாகும் தகவலை ஆளுங்கட்சி உறுப்பினரொருவர் நிராகரித்தார்.
‘ எல்லை நிர்ணயப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு, அடுத்த வருடத்துக்குள் தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.” – எனவும் அவர் கூறினார்.
மாகாணசபைத் தேர்தலை அடுத்த வருடம் முற்பகுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றே ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின. அமைச்சர்கள் சிலரும் இந்த கருத்தை வெளியிட்டிருந்தனர்.
எனினும், தேர்தலை காலவரையின்றி ஒத்திவைப்பதற்கு ஆளுங்கட்சிக்குள் கலந்துரையாடப்பட்டுள்ளது என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையிலேயே இத்தகலை ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் நிராகரித்தார்.