மாகாணசபை தேர்தல் மூலம் மக்களை எதிர்கொள்வதற்கு அஞ்சுவதாலேயே அரசாங்கம் திட்டமிட்டு மாகாணசபை தோ்தலை ஒத்திவைக்க மீண்டும் முயற்சிக்கிறது. என மத்திய மாகாணசபை உறுப்பினா் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். எந்த சிறுபாண்மை கட்சிகளை வைத்து தோ்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற சட்டத்திருத்ததை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கம் நிறைவேற்றிக்கொண்டதோ அதே சிறுபான்மை கட்சிகளை வைத்து இந்த சட்டம் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் என்று காரணத்தை சொல்லவைத்து மாகாணசபை தோ்தலை ஒத்திவைக்க வழிதேடிக்கொண்டிருக்கிறது.
நல்லாட்சி அரசாங்கம் மாகாணசபை தோ்தல் முறை மாற்றம் என்ற பேரவையில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தோ்தல் சட்டத்திருத்ததை நிறைவேற்றி மாகாணசபை தோ்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற தனது நோக்கத்தை தற்காலிகமாக நிறைவேற்றிக்கொண்டது. அதனால் மூன்று மாகாணங்களில் தோ்தல் நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தோ்தல் சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயம் சிறுபாண்மை மக்களின் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தைக் காட்டி மேலும் தோ்தலை ஒத்திவைப்பதற்கு முணைப்புக்கள் எடுக்கப்பட்டுவருகின்றன.
மாகாணசபை தோ்தலை நடத்த வேண்டும் என்று உண்மையாகவே அரசாங்கம் கருதினால் சிறுபாண்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துகின்ற திருத்தங்களை இந்த சட்டத்தில் உட்புகுத்தி தீர்வுகாண முடியாதா? 70 ற்கு 30 என்ற வீதாசார முறையை கொண்டு வருவதன் மூலம் சிறுபாண்மை மக்களுக்கு சிறிய தொகுதிகளை உருவாக்க முடியாதா? பிரதேச சபை தோ்தல் சட்டத்தில் பெண்களின் 25 வீத பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த கையாண்ட முறையை ஒத்ததாக மாகாணசபையில் உறுப்பினா்கள் எண்ணிக்கை மாவட்ட இன ஜனத்தொகை வீதாசாரத்தை கட்டாயமாக பிரதிபளிக்க வேண்டும் என்ற சட்டத்தை இதில் உட்புகுத்த முடியாதா? இவையெல்லாம் அரசாங்கம் நினைத்தால் சாத்தியப்பட கூடிய விடயங்களே.
இந்த நிலையில் தற்போது மாகாணசபை தோ்தல் திருத்த சட்டமூலத்தை மீள உறுதிப்படுத்திக்கொள்ள மீண்டும் பாராளுமன்றத்தில் அரசாங்கம் சமா்பிக்கவுள்ளதாக தொியவருகிறது. அத்துடன் இந்த சட்டமூலத்தற்கு எதிராக வாக்களித்து அதை தோற்கடிக்க ஐக்கிய தேசிய கட்சியும் அதன் தோளமை கட்சிகளும் தீர்மானித்திருப்பதாகயும் அறியமுடிகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் மாகாணசபை தோ்தலை எந்த முறையிலும் நடத்த முடியாத நிலைமை ஏற்படலாம். இது நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைக்கு விடுக்கப்படும் சவாலாகும்.
மாகாணசபை தோ்தல் திருத்த சட்டமூலத்தை மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசாங்கத்தோடு இணைந்து செயற்படுகின்ற சிறுபாண்மை கட்சிகள் அளப்பரிய பங்கை வழங்கியிருந்தன. புதிய தோ்தல் முறையில் சிறுபாண்மை மக்களின் பிரதிநிதித்துவதற்கு பாதகம் என்றால் அதை தொிந்துகொண்டு ஏன் இவா்கள் சாதகமாக வாக்களித்தார்கள்? அப்படியென்றால் பிரதமரை திருப்திபடுத்துவதற்காக தமது சொந்த மக்களின் இறைமையை கேள்விக்குறியாக்கியிருக்கிறார்கள். அமைச்சா் மணோகணேசன் ஜனாதிபதி தொலைபேசியில் கேட்டுக்கொண்டதற்கினங்கவே தாம் வாக்களித்தாக கூறுகிறார். ஒரு பொறுப்புவாய்ந்த அமைச்சா் இவ்வாறு பொறுப்பற்றவிதத்தில் சமாளிக்க முடியாது. தற்போது மாகாணசபை தோ்தல் பிற்போடப்படுவதற்கான பொறுப்பை இவா்கள் ஏற்க வேண்டும். அத்துடன் உத்தேச புதிய மாகாணசபை தோ்தல் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிராகாிக்கப்படுமானால் அது பழைய வீதாசார தோ்தல் முறையில் உடனடியாக தோ்தலை நடத்துவதற்கு வழிவகுக்க வேண்டும். எனவும் மத்திய மாகாணசபை உறுப்பினா் கணபதி கனகராஜ் தொிவித்துள்ளார்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)