புதிய அரசியல் அமைப்பு குறித்த மக்களின் கருத்தறியும் குழு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ள சிபாரிசுகளில் மாகாணங்களுக்குள்ளேயே சிறுபான்மையினராக வாழுகின்ற மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு எவ்விதமான தீர்வையும் முன்வைக்கவில்லை. என மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள மாகாண சபைகள் பல இனங்களை கொண்டவையாக காணப்படுகின்றன. தற்போதைய மாகாண சபை நிர்வாகங்கள் மாகாணத்தில் உள்ள பெரும்பான்மை மக்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் சட்ட ஏற்பாடுகளை கொண்டே காணப்படுகின்றன.
நடைமுறையில் சிறுபான்மை மக்கள் இரண்டாந்தர பிரஜைகளாகவே கணிக்கப்பட்டு வருகின்றனர். இந் நிலையை போக்குவதற்கு புதிய அரசியல் யாப்பில் சிபார்சுகள் முன்வைக்கப்படுமென பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மாகாண சபைகளுக்கு இருக்கின்ற அதிகாரங்களை கூட மாகாணசபையின் அனுமதியில்லாமல் மத்திய அரசாங்கத்தால் மீள பெறமுடியுமென செய்யப்பட்டுள்ள புதிய சிபாரிசு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
ஒரே இனம் வாழுகின்ற மானிலங்களில் பிரதேச ரிதியாக சட்டசபைகளை அமைத்துள்ள இந்தியா, அந்த அனுபவத்தை அடிப்படையாக கொண்டு, இலங்கையின் இனப்பரம்பல் முறைகளை ஆராயாமல் அவசரத்தில் அறிமுகப்படுத்திய அரைவேட்காட்டு மாகாணசபைகளே தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ளது.
இலங்கையில் உள்ள மாகாண சபை நிர்வாகத்தில் மகாணத்தின் இன வீதாசாரத்திற்கேற்ப வள பங்கீடு செய்வதில்லை. அரச தொழில் வாய்ப்புக்களிலும் பாரிய பாராபட்சம் காட்டப்படுகின்றது. பதவி உயர்வுகளில் சிறுபான்மையினர் முற்றாக புறக்கனிக்கப்பட்டே வருகின்றனர். மொழி அமுலாக்கம் பேச்சளவிலும், ஏட்டளவிலும் காணப்படுகின்றது.
சிறுபான்மை மக்கள் வாழுகின்ற பிரதேசங்கள் மாகாண அபிவிருத்தியில் மிக பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. இவ்வாரான பல குறைபாடுகளை களைவதற்கு புதிய அரசியல் அமைப்பில் சாதகமான சிபார்சுகள் மேற்கொள்ள மக்கள் கருத்தறியும் குழு தவறியிருக்கிறது.
மலையக மக்களுக்கு நடைமுறையில் உள்ள மாகாணசபைகளினால் பயனில்லை என்பதை சரியான முறையில் இணங்கண்டதனாலேயே வட மாகாணசபை மலையக தமிழ் மக்களுக்கு தனியான நிர்வாக அலகை சிபார்சு செய்தது.
குறைந்த பட்சம் மாகாணத்திற்குள் வாழுகின்ற சிறுபான்மை மக்களின் உரிமைகளை உரிதிப்படுத்தக்கூடிய தனியான அமைச்சு அல்லது அதிகாரசபை ஒன்றை சிபார்சு செய்திருக்கலாம்.
மக்கள் கருத்தறியும் குழு சிபார்சு செய்துள்ள செனட் சபை பாராளுமன்றத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதை போல, மாகாண சபைகளில் சிறுபான்மை மக்களின் நலன்கள் சரியான முறையில் பேணப்படுகின்றதா என்பதை உறுதி செய்யும் மேல் சபை ஒன்றை நிறுவுவது தொடர்பாக செய்யப்பட்ட சிபார்சுகளை மக்கள் கருத்தரியும் குழு கவணத்தில் எடுத்துக்கொல்லவில்லை.
மக்கள் கருத்தறியும் குழுவின் சிபார்சில் குறிப்பிப்பட்டுள்ள உப ஜனாதிபதி முறை சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்த வழங்கப்படுகின்ற அலங்கார நாட்காலி மட்டுமே. சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்காமல் கவர்ச்சிகரமான சிபார்சுகள் மட்டும் இன பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை தராது எனவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்