கொழும்பு நாரஹேன்பிட்டி பார்க் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நான்கு மாடி கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாரஹேன்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹாலிஎல, திக்வெல்லஹேன பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மாணிக்கம் என்ற இருபத்தி மூன்று வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கட்டட வேலையில் ஈடுபட்டு வந்த இந்த இளைஞன் விருந்து நடத்தியதாகவும், விருந்து முடிந்து சில தேவைக்காக கீழே இறங்கிய போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவருடன் கட்டடத்தில் பணிபுரிந்த மற்ற இருவர் அவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட நபருக்கு அறிவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் பிரேதப் பரிசோதனை கொழும்பு காவல்துறை வைத்தியசாலையில் நடைபெறவிருந்தது.