மாணவனை அச்சுறுத்தி பணத்தை பறித்து சென்ற கொள்ளையர்கள்

0
197

வீதியால் சைக்கிளில் சென்ற பாடசாலை மாணவனை வழிமறித்து, மாணவனை அச்சுறுத்தியதுடன் அவனிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய் பணத்தை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் யாழ்.சின்னக்கடை பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

யாழ்.நாவற்குழி – ஐயனார் கோவிலடியை சேர்ந்த குறித்த மாணவன் பிரத்தியேக வகுப்பிற்காக, யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையத்தற்கு வந்துள்ளார்.

இதன்போது சின்னக்கடை பகுதியில் மாணவனை வழிமறித்த வழிப்பறி கொள்ளை கும்பல் கஞ்சா இருப்பதாக கூறி மாணவனை அச்சுறுத்தியதுடன் சோதனையும் செய்துள்ளனர்.

இதன்போது மாணவனிடமிருந்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்த வழிப்பறி கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here