புசல்லாவை பிளக்போரஸ்ட் தமிழ் வித்தியாலயத்தில் 2022 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு அதிபர் பி. உதயகுமார் தலைமையில் இன்று (2023,03,23) இடம்பெற்றது.
பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் கலந்து கொண்டார்.
மாணவர்கள் பதக்கம், சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்படுவதையும், வர்த்தகர் P. புவனேந்திரகுமாரின் அனுசரணையுடன் சகல மாணவர்களுக்கும் புத்தகப் பைகளும் வழங்கப்பட்டன. நிகழ்வில் கம்பளை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி இந்திராணியும் கலந்து கொண்டார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.