நாட்டில் இன்று ஆரம்பகல்வியை கற்காத சிறுவர்களை பாடசாலைகளுக்கு உள்வாங்குவதற்கு கடினமாகவே கானப்படுகிறது அந்த வகையில் மாணவர்களுடைய சிந்தனைகளை வளர்ப்பதற்கு ஆரம்பகல்வி மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளதாகவூம் நாட்டில் உள்ள ஒவ்வொரு சிறுவர்கள்களும் ஆரம்பகல்வியை கட்டாயம் கற்க்கவேண்டும் என மலையக மக்கள் முண்ணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டனியின் பிரதிதலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதகிருஸ்னண் தெரிவித்தார் 29.09.2018.சனிகிழமை அட்டன் பிரின்ஸஸ் மண்டபத்தில் இடம் பெற்ற முன்பள்ளி பாடசாலைமாணவர்களுக்கான சித்திர போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசழிப்பு விழாவில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே இதனை தெரிவித்தார்இந்நிகழ்வில் கலந்து கொண்டு மேலும் உறையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்ணன் இன்று உள்ள மாணவர்களுக்கு பாடசாலையில் கல்விகற்கின்ற போது எதோ ஒருவகையில் இன்றைய மாணவர்கள் காலத்திற்கு ஏற்றவாறு வளர்ச்சியடைந்து இருக்கிறார்கள் ஒரு மாணவனிடம் ஒரு ஸ்மாட் கையடக்க தொலைபேசியை வழங்கினால் அந்த தொலைபேசியில் உள்ள அனைத்து விடயங்களை நன்கு அறிந்து கொள்ள கூடியவாறு இன்றைய மாணவர்கள் விளங்குகிறார்கள்
மலேசியா நாட்டிற்கு கல்வி தொடர்பான நிகழ்வு ஒன்றுக்கு நான் கலந்து கொண்ட போது அங்கு சொல்லுகிறார்கள் ஒரு மாணவன் கட்டாயம் ஆரம்பகல்வியை தொடரவேண்டும் அவ்வாறு ஆரம்பகல்வியை தொடருகின்றமையால் தான் அந்நாட்டு மாணவர்களுடைய உடல் வளரச்சியினையும் மூளைவளர்ச்சியினையும் பெற்று கொள்ளமுடியும் அந்தவகையிலே ஒரு மாணவனுக்கு மூலைவளர்ச்சி என்பது 07வயது வரை கொண்டிக்கவேண்டுமென மலேசியா நாட்டவர்கள் கூறுகிறார்கள் அதன் அடிப்படையில் 07வயதிற்கு பிறகுதான ஒரு மாணவனுக்கு பாடசாலைக்கான அனுமதி வழங்கபடுகிறது ஆனால் இலங்கை நாட்டின் சட்டதிட்டபடி ஆறு வயதில் ஒரு மாணவன் பாடசாலைக்கு அனுமதி வழங்கபட்டுள்ளதாக தெரிவித்தார் சிலநாடுகளில் மாணவர்களை ஏழு வயதிற்கு பிறகுதான் பாடசாலைகளுக்கு அனுமதிக்க முடியுமென அந்த நாட்டவர்கள் கூறுகிறார்கள் அவர்கள் ஏன் அவ்வாறு கூறுகிறார்கள் என்றால் அந்த மாணவர்களுக்கு எது பிடித்து இருக்கிறதோ எதை விரும்புகின்றார்களோ அதைகொடுப்பதுதான் ஆரம்பகல்வியின் நோக்கம்
ஆனால் இன்று இங்கு உள்ள ஆரம்பகல்வியின் ஆசிரியர்கள் எல்லாம் ஒரு தெய்வத்திற்கு சமனானவர்கள் மற்றவர்களுடைய பிள்ளைகளை ஆரம்பகல்வி கல்வி ஆசிரியர்களே பராமரித்து அவர்களுக்கான பாதுகாப்பினையும் வழங்கி வருகிறார்கள் மற்றவர்களுடைய பிள்ளைகளை உங்களால் பார்த்து கொண்டு அவர்களை சிறந்த வழிநடத்தலுக்கு கொண்டு செல்லுகின்ற போது நிச்சயமாக நீங்கள் ஒரு தெய்வஸ்தானத்தை அடைகிறீர்கள் அன்று மதர் திரேஸா போல் இன்று முன்பள்ளி ஆசிரியர்களும் ஒரு திரேஸா என குறிப்பிட்டார்.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்



