நாடளாவிய ரீதியில் நாளை(25) அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவுகள் மீள திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்கள் தமது சீருடையில் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய கட்டாயமில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்திற்கும் மேலாக பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. இதனால் பல மாணவர்களுக்கு தம்மிடமுள்ள சீருடைகளை அணிய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சீருடைகளை அணிய இயலாத மாணவர்கள் பாடசாலைக்கு பொருத்தமான ஆடைகளை அணிந்து செல்லுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.