நோர்வூட் போற்றிதோட்ட பகுதியில் காசல் நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் கேசல் கமுவ ஒயாவிற்க்கு அருகாமையில் பாரிய அளவில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வுகளில் வெளிபிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருவதாக பிரதேசமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்குறித்த பகுதியில் இந்த சட்ட விரோதமான மாணிக்ககல் அகழ்வு நீண்டகாலமாக இடம் பெற்றுவருவதாகவும் இந்த சட்டவிரோத மான மாணிக்கல் அகழ்வினால் காசல் நீர் தேக்கத்திற்கு மண் அள்ளுண்டு செல்லபடுவதானால் மின்சார உற்பத்திக்கு பெரிதும் பாதிக்கடுவதோடு காசல்ரீ நீர்தேக்கத்தின் ஆழம் குறைவடைந்து வருவதாகவும் தெரிவிக்கபடுகிறது
எனவே குறித்த பகுதியில் இரவு நேரங்களிலே இவ்வாறான சட்டவிரோத மாணிக்கல் அகழ்வு இடம் பெற்று வருவதோடு தேயிலை மரங்களும் வினடிக்கபடுவதாகவும் இது குறித்த பிரதேசத்திற்க்கு பொறுப்பான பொலிஸார் நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என பிரதேசமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேலை இந் நாட்டின் பிரசித்த பெற்ற கிளை ஆறுகளில் ஒன்றான கேசல் கமுவஓயா ஆறும் முக்கிய இடம் வகிக்கின்றமையால் இந்த சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வினால் குறித்த கேசல்கமுவ ஓயாவின் நீர் மாசடைவதற்கான வாய்புகள் அதிகம் கணபடுவதாக புத்தி ஜீவிகளும் கல்வி மான்ங்களும் தெரிவிக்கின்றனர்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)