மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் ஒருவர் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடகம பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 60 வயது உடைய நபர் ஒருவர் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த நபரிடமிருந்து மாணிக்க கல் அகழ்விற்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சந்தேக நபரை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜபடுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




