மாத்தளையில் ஆரம்ப நல்வாழ்வு மையம் திறந்து வைப்பு

0
21

அரசாங்கத்தின் ஹெல்த்தி ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நாட்டில் இந்த ஆண்டு 100 ஆரம்ப சுகாதார நிலையங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ஐந்தாவது சுகாதார நிலையம் (நல்வாழ்வு மையம்) மாத்தளை மாவட்டத்தில் உள்ள டன்கத்த சுகாதார ஆரோக்கிய மையம், சுகாதார அமைச்சர் தலைமையில் சமீபத்தில் பொதுமக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நக்கிள்ஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ள டன்கந்த கிராமத்தில் நிறுவப்பட்ட இந்த நல்வாழ்வு மையம் டன்கந்த, யசலுகஸ்தென்ன மற்றும் தம்பகொல்ல ஆகிய மூன்று கிராம சேவை பிரிவுகளில் வசிக்கும் கிட்டத்தட்ட 5000 மக்களுக்கு தனது சேவையை வழங்க உள்ளது. இதற்கு முன்னதாக காலி, ரத்தினபுரி களுத்துறை, மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் ஆரோக்கிய மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த சுகாதார மையங்கள் ஊடாக மக்களுக்கு அடிப்படை வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மேலதிக சிகிச்சை தேவைப்படின் அடுத்த கட்ட வைத்தியசாலைகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல உள்ளூர் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகளையும் படிப்படியாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் உடற்பயிற்சி யோகா மற்றும் இசை சிகிச்சை போன்ற விடயங்களை பற்றி அறிந்து கொள்ளும் இடமாகவும் இந்த சுகாதார மையங்கள் காணப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here