மாத்தளை பொலிஸ் பிரிவின் மாத்தளை-ரத்தோட்ட வீதியில் நேற்று (29) இடம்பெற்ற விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
மாத்தளை பொலிஸ் பிரிவின் மாத்தளை-ரத்தோட்ட வீதியில் உள்ள மானந்தண்டாவெல பகுதியில், முச்சக்கர வண்டியொன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சாரதியும், தாயாரும் குழந்தையும் காயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளது.
மாத்தளை பகுதியில் வசித்த ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.