இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட 1235 வீடுகள் முதல் கட்டமாக இன்று மக்களுக்கு கையளிக்கப்பட்டது. இந்திய வெளிவிவகார செயலாளர் தலைமையில் பிரதமர் மாளிகையில் நிகழ்நிலை தொழில்நுட்பத்தின் ஊடாக இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன் சம நிகழ்வு மாத்தளை ஹுனுகளை தோட்டத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபசெயலாளர் பாரத் அருள்சாமி மற்றும் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளர் சிவஞானம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த பாரத் அருள்சாமி இவ் வீடமைப்புத் திட்டத்தை அமைத்துத் தந்த இந்திய அரசாங்கத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் தோட்ட மக்கள் சார்பாகவும் மலையக மக்கள் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்தார் மேலும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக வீட்டு திட்டங்களுக்கு தேவையான பாதை வசதி மின்சார வசதி மற்றும் குடிநீர் வசதி என்பன வழங்கப்பட்டுள்ளன.
மேலும் எதிர்காலத்தில் எம் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் எமது அமைச்சும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் என்றும் முன் நிற்கும் என்றும்அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் எல்கடுவ பெருந்தோட்ட யாகத்தின் தலைவர் பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் உதவி செயலாளர் ரத்தோட்ட பிரதேசசபை தலைவர் அம்பன் கங்கை கோரலை பிரதேச சபைத் தலைவர் மற்றும் பிரதேச சபை உப தலைவர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் தோட்ட அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.