இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் 18 வருட பூர்த்தியினைன முன்னிட்டு அறநெறி எழுச்சி விழாவும் மலையகம் 200 மாபெரும் விருது வழங்கும் விழா நாளை 22 ம் திகதி கொட்டகலை ரிசிகசி கலாசர மண்டபத்தில் 8.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளதாக ஒன்றியத்தின் ஸ்தாபகரும் பொதுச்செயலாளருமான சிவஸ்ரீ சுரேஸ்வர சர்மா தெரிவித்தார்.
குறித்த நிகழ்வு பாரத தேசத்தின் தமிழ் நாடு திருகைலாய ஸ்ரீ கந்தப் பரம்பரை சூரியனார் கோயில் ஆதீனம் ஸ்ரீ கார்யம் சிவநெறி பிரச்சசாரகர் திருமறைக்கலாநிதி ஸ்ரீலஸ்ரீ சிவகர தேசிக சுவாமிகள் முன்னிலையில் இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் ஸ்தாபகரும் பொதுச்செயலாளருமான சிவஸ்ரீ சுரேஸ்வர சர்மா தலைமையில் ஆரம்பமாகவுள்ளன.
இந்த நிகழ்வில் புத்தசாசன் சமய மற்றும் கலாசர அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநநாயக்க.நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்புபு அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் பிரதம அழைப்பாளர்களாகவும் கனடா வோல் எக்ஸன் பவுன்டேசன் ஸ்தாபகர் சுபாஸ் சுந்தரராஜ் உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சமய தலைவர்கள் இந்து ஆலயங்களின் குருக்கள்,அறநெறி ஆசிரியர்கள்,சமூக சேவையாளர்கள்,ஊடகவியலாளர்கள் அறிவிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
குறித்த நிகழ்வில் சமயத்திற்கும் சமூகத்திற்கும் தொண்டாற்;றியவர்கள் ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளன.
இந் நிகழ்வில் பாராம்பரிய கலை ககலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்