மாமன்னன் விமர்சனம் : இசைப்புயலும், வைகைபுயலும் செய்த தரமான சம்பவம்

0
149

படத்தை பார்த்த பலரும் முதல் பாதி அருமை என்றும் இரண்டாம் பாதி சொதப்பலாக இருப்பதாக விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், அழகம் பெருமாள், லால் மற்றும் விஜயகுமார் நடிப்பில் உருவான மாமன்னன் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

படத்தை பார்த்த பலரும் முதல் பாதி அருமை என்றும் இரண்டாம் பாதி சொதப்பலாக இருப்பதாகவும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

மாமன்னன் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதை விட வடிவேலுவின் சரியான ரீ என்ட்ரி படமாக மாமன்னன் உள்ளது.

எந்த இடத்திலும் பிசிறு தட்டாத நடிப்பால் வடிவேலு ஒட்டுமொத்த ரசிகர்களையும், இந்த படத்தை ஒருமுறையாவது பார்க்க வைத்து விடுவார் என்றால் அது மிகையல்ல.

கண்டிப்பாக வடிவேலுவின் நடிப்புக்காகவே தாராளமாக மாமன்னன் படத்தை பார்க்கலாம்.

நடிகர் உதயநிதியை நாயகனாக காட்ட படத்தில் சண்டை காட்சி வைக்கப்பட்டிருக்கின்றது.

மாரி செல்வராஜ் படத்தில் எதிர்பார்க்கப்படும் அனைத்தும் மாமன்னன் படத்தில் முதல் பாதியில் இருக்கிறது.ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறை காட்சிகள், காதல், மனிதத்தன்மையே இல்லாத வில்லத்தனம் என எல்லாமே இருக்கிறது.

அதை திரையில் காட்டியதில் மாரி செல்வராஜ் நம்மை அதிருப்தி அடைய செய்யவில்லை.

நடிகர்கள் யாரையும் குறை சொல்ல முடியாது. பஹத் ஃபாசில் தன் நடிப்பால் மிரட்டியிருக்கிறார். கீர்த்திசுரேஷ் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை அழகாக செய்திருக்கிறார். அவருக்கு பெரிதாக வேலை இல்லை.

வடிவேலு தான் அபார நடிப்பால் மிரள வைக்கிறார். அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டார்.இரண்டாம் பாதி ஒடுக்கப்பட்டவர்களுக்கும், ஆதிக்க வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே நடக்கும் அதிகார ஆட்டமாக இருக்கிறது. ஆனால் இந்த காட்சிகளின் தாக்கம் பெரிதாக இல்லை.

மேலும், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசை படத்திற்கு பக்கபலமாகவுள்ளது.மொத்தத்தில் சொல்லப்போனால் மாமன்னன் படத்தில் இசைப்புயலும், வைகைப்புயலும் இணைந்து தரமான சம்பவம் செய்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here