மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பெண் நோயாளியின் மோதிரங்களை அபகரித்த தாதி கைது

0
130

மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கையிலிருந்த மோதிரங்களை அபகரித்த தாதி ஒருவர் கைது செய்ய்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கட்டுகஸ்தோட்டை ஆதார வைத்தியசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாத்தளை மாட்டிபொக்க பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டுப் பணிப்பெண்ணுடன் கட்டுகஸ்தோட்டை கொண்டதெனிய பகுதிக்கு புதன்கிழமை (25) சென்று கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து உடனடியாக அவர் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அடிப்படை சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதன்போது கட்டுகஸ்தோட்டை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை குறித்த நோயாளி பல மோதிரங்களை அணிந்திருந்ததை அவதானித்த வைத்தியசாலை ஊழியர்கள், கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது மோதிரங்களை காணவில்லை என கண்டறிந்தனர்.

இது தொடர்பில் வைத்தியசாலை ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த சம்பவம்தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் காவல்துறை நாயை அனுப்பி மோப்பம் பிடித்தனர்.

அந்த நாய் சந்தேகப்பட்ட தாதியின் அருகில் சென்று நின்றுள்ளது. அதன்பின்னர் அந்த தாதியை சந்தேகத்தின் பேரில் கைது செய்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here