மனித உடலில் மிகவும் முக்கியமான தொழிற்பாட்டை இதயம் வகிக்கிறது. இதயமானது ஆரோக்கியமாக சீராக துடித்து கொண்டிருக்கும் வரை நாம் ஆரோக்கியமாக செயற்படலாம்.
இதனால், எமது இதய துடிப்பானது சீராக இருக்க வேண்டியது மிக முக்கியம். சில சமயங்களில் ஏற்படும் சீரற்ற இதய துடிப்பானது எமக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
தூக்கம், உடல் செயல்பாடுகள் மற்றும் மன அழுத்தம் போன்ற சமயங்களில் இதயத் துடிப்பின் செயற்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படுவது வழமை.
இருப்பினும், மற்ற நேரங்களில், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு அல்லது அரித்மியா போன்று இருப்பது ஒரு தீவிர பிரச்சனையாக இருக்கலாம்.
அரித்மியா என்பது இதய துடிப்பு சீரற்ற நிலையில் இருக்கும் மோசமான சுகாதார நிலைமையை குறிப்பிடலாம்.சில வகையான அரித்மியாக்கள் பாதிப்புக்களை பாரிய ஏற்படுத்தாது, அதற்கு உடனடி சிகிச்சை தேவையில்லை.
ஆனால், மற்றவை சில அரித்மியாக்கள் திடீர் மாரடைப்பு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை.அதனால், உடனடியாக மருத்துவரை நாடி உரிய சிகிச்சைகளை பெற வேண்டியது முக்கியம்.
நீங்கள் எந்த வகையான அரித்மியாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள், மற்றும் எந்த வகையான சிகிச்சை தேவை என்பதை இருதயநோய் மருத்துவர்களிடம் கட்டாயம் கேட்டறிந்து கொள்ளுங்கள்.
ஒழுங்கற்ற அல்லது அசாதாரணமான இதயத் துடிப்புகள் என்பது இதயத் துடிப்பின் வேகம் அல்லது சத்தத்தில் ஏற்படும் பிரச்சனையாகும்.
இந்த ஒழுங்கற்ற இதயத் துடிப்புகள் அரித்மியா என கூறப்படுகிறது.