மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் – ஜனாதிபதி நிதியம் ஆதரவு

0
4

மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான திட்டத்தை முறைப்படுத்த ஜனாதிபதி நிதியத்தின் ஆதரவு
மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான முறையான வழிமுறையை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலக அதிகாரிகளுக்கு இடையே இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கான ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்துதல் மற்றும் முறையாக வழங்குதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்துடன் இணைந்து திட்டங்களை செயல்படுத்துதல் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகளை அதிகரிப்பது, அவர்களை வலுவூட்டுவதற்குத் தேவையான உபகரணங்களை வழங்குதல், அந்தக் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் கல்வியைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க உதவி வழங்குதல், மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு கல்விக்கான உதவிகளை வழங்குதல் போன்றவற்றை ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கவும் தற்பொழுது வழங்கப்படும் சேவைகளை மேலும் செயற்திறனுடன் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் ஜயமாலி.சி. விக்ரமாராச்சி மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here