மாவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்கமுடியாது?

0
81

கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டாலும் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்கும் இயலுமை இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்  கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் பிறிமா நிறுவனத்தினால் குறைக்கப்பட்டிருந்தது.

மேலும், பாண் உற்பத்திக்கு விற்கப்படும் கோதுமைமாவின் மொத்த சில்லறை விலை 200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன் பேக்கரி உற்பத்திகளுக்கு பயன்படும் மாவின் விலை அதிகரிக்கப்பட்டமையால் மீண்டும் அவற்றை விலைகளை குறைத்து விற்பதற்கான இயலுமை இல்லை எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே.ஜெயவர்தன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here