மிக ஆபத்தான டெல்டா கொவிட் திரிபு மற்றும் அல்பா கொரோனா வைரஸ் திரிபுடன் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்…..!

0
232

இந்தியாவில் மிகவேகமாக பரவிவரும் வீரியம் கொண்ட டெல்டா (B.1.617.2) கொவிட் திரிபு தொற்று உறுதியான 5 பேர் கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தற்போது இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள B.117 கொவிட் திரிபை காட்டிலும் 50 மடங்கு பரவல் வேகம் கொண்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைகளில் குறித்த ஐவரும் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்தார்.

கொழும்பு – 9, ஆராமய பகுதியில் குறித்த தொற்றுறுதியானவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்டா திரிபுடன் கூடிய தொற்றாளர்கள் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இதற்கு முன்னதாக டெல்டா கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்ட இருவர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

இதேநேரம், பிரித்தானியாவின் அல்பா கொரோனா வைரஸ் திரிபு தொற்றுறுதியான 8 பேர், காலி, மட்டக்களப்பு, கொழும்பு – 6, கொழும்பு – 8 மற்றும் கொழும்பு – 10 ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here