மியன்மாரில் தற்போது இராணுவ ஆட்சி இடம்பெறுவதையடுத்து அங்கு உள்நாட்டு கிளர்ச்சிப் படைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனால், மியன்மாரின் எல்லையையொட்டி அமைந்துள்ள வடகிழக்கு மாநிலமான மிசோரமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மியன்மார் அகதிகளின் விரல் இரேகை அடையாளம், கருவிழி பதிவு மக்கள் தொகை விபரங்களை சேகரிக்க மிசோரம் அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் அச்சத்தில் இருந்த மியன்மார் அகதிகள், நாடு திரும்பத்தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக ஜோகாவ்தர் கிராமத்தில் தஞ்சம் புகுந்த 2,923 அகதிகளும், வபாயில் தங்கியிருந்த 39 பேரும் தங்கள் கிராமங்களுக்கு திரும்பிஉள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.