மின்சாரம் தாக்கி தந்தையும் 2 வயது குழந்தையும் உயிரிழப்பு..!

0
153

புஸ்ஸல்லாவ – மைப்பால பகுதியில் சட்டவிரோதமான மின்கம்பியில் சிக்கி தந்தையும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் 32 வயதுடைய தந்தை மற்றும் அவரது 02 வயது 8 மாத மகள் என பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர்கள் மைப்பால, கொட்டகேபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் தனது மரக்கறித் தோட்டத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அனுமதியற்ற மின்சார கம்பி வேலியை அமைத்திருந்தார்.

இதில் இருவரும் சிக்கிய நிலையில், அயலவர்கள் மின் கம்பியை அகற்றி கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.எனினும் இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here