மின்சார கட்டணம் அதிகரிப்புக்கு மலையக இந்து குருமார்கள் ஒன்றியம் கண்டனத்தினை வெளியிட்டுள்ளது.

0
216

நாட்டில் மின் கட்டணம் என்றுமில்லாதவாறு சுமார் 75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது நாட்டில் பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் இதனால் சமய தலங்களும் பாரிய அளவில் நெருக்கடியான நிலையினை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என இந்த மின்சார கட்டணம் அதிகரிப்பு கண்டனத்தினை வெளியிடுவதாக இலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர்  ஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா தெரிவித்தார்;.

நேற்று (17) கொட்டகலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சமய தலங்களுக்கு மக்களின் வருகையும் குறைவடைந்துள்ளன.

மக்களின் அன்றாட பங்களிப்பு காரணத்தினாலேயே இந்;த ஆலயங்கள், விகாரைகள், பள்ளிவாசல்கள், கிறிஸ்த்தவ தேவாலயங்கள் உள்ளிட்டவை இயங்கிவருகின்றன.
இன்று மின்சாரகட்டணம் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக தற்போது உள்ள கட்டணத்தினை விட இது மும்மடங்காக அதிகரிக்கும். இது பொது தலங்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத கட்டணமாகும் எனவே இது குறித்து அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கம் இவ்வாறான கட்டணங்கள் அதிகரிக்கும் போது நாட்டு மக்கள் தொடர்பாகவும் நாட்டின் பொது அமைப்புக்கள் தொடர்பாகவும் அக்கறை செலுத்த வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

மலவைாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here