மின் கட்டணத்தை உயர்த்தியதை யடுத்து மாதாந்த மின்கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் பெருந் தோட்ட தொழிலாளர்களும் கிராம பகுதிகளில் வாழும் பாமரை மக்களும் அவஸ்த்தை படுகின்றனர். எனவே அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை மறு பரீசீலணை செய்து மின்சாரக் கட்டணத்தை குறைப் பதற்க்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா அமைப்பாளரும், நுவரெலியா மாவட்ட தமிழ் பிரிவு குழு தலைவருமான தொழிலதிபர் கலாநிதி சதானந்தன் திருமுருகன் தெரிவித்துள்ளார்.
அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில், குறைந்த எண்ணிக்கையிலான யுனிட்களை பாவித்தாலும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் செலுத்த முடியாத அளவுக்கு மின்கட்டண பட்டியல் வந்துள்ளதாகவும், தங்க நகைகளை அடகு வைத்தே மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலைமைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ள தாகவும் பெருந்தோட்ட தொழிலாளர் கள் கவலை தெரிவிக்கின்றார்கள் .
நாளாந்தம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கைச் செலவை கொண்டு நடத்த முடியாத நெருக்கடியில் வாழ்ந்து வரும் நிலையில் மின்சார கட்டண அதிகரிப்பால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனவும் மின்சாரத் திற்கு மாற்றாக மண்ணெண்ணெய் பயன்படுத்துவதே தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரே நிவாரணமாக மாறியுள்ளதாகவும், ஆனால் மண்ணெண்ணெய் விலை அதீத அதிகரிப்பு மற்றும் மண்ணெண்ணெய் கிடைக்காததால் தற்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நாட்டிற்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் இவ்வாறான நிலமை எண்ணும்போது மிக கவலையளிக்கின்றது. பெரிய அளவிலான மின்சார கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கு மலையகத்தை பிரதிநிதித் துவப்படுத்தும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க வேண்டும். என பெருந்தோட்ட தொழிலாளர்கள் சார்பில் சதானந்தன் திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டி சந்ரு