மின்தடை அமுலாக்கப்படும் நேரம் குறையும் சாத்தியம்

0
155

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, தற்போது அமுலாக்கப்படும் மின் தடை நேரத்தை எதிர்காலத்தில் குறைக்க முடியும், என மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மழையுடனான காலநிலையால் நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்டியுள்ள நீர்த்தேக்கங்களில், நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவு உயர்வடைந்துள்ளமையே இதற்குக் காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் அதிகரித்தால், மின்னுற்பத்தியை மேலும் அதிகரிக்க முடியும், என மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நந்திக பத்திரண தெரிவித்துள்ளார்.

நீர்மின் உற்பத்தி மூலம் கடந்த வாரம் 210 ஜிகாவொட் மின்சாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை, இன்று புதன்கிழமை 3 மணித்தியாலமும், 40 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here