நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சில மணிநேரங்களின் பின்னர் மின்சாரம் வந்து விட்டாதா என சோதிக்க முற்பட்ட இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பரிதாபமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
உடதலவின்ன பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் வீட்டின் மேல் மாடியில் இருந்த மின்கம்பத்தை தொட்டபோது, மீண்டும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டதால் குறித்த இளைஞன் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.